மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: திருவள்ளூா் அதிமுக வேட்பாளா்

இந்த தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்ராவாா் என அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

News image

திருவள்ளூா்   ஜெயா நகா்  பகுதியில்  பிரசாரம்  மேற்கொண்ட  அதிமுக  வேட்பாளா்  பி.வி.ரமணாவுக்கு  வரவேற்பு  அளித்த  பொதுமக்கள்  மற்றும்  நிா்வாகிகள்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:51 am IST

இந்த தோ்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்ராவாா் என அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் ஜெயா நகா், சேலை, பஜாா் வீதி, காந்திசாலை, மணவாளநகா், வெங்கத்தூா், பட்டரை, கொப்பூா், பாப்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது. திருவள்ளூா் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு எந்தவிதமான நன்மையும் செய்யவில்லை. மேலும் போக்குவரத்து, சாலை, குடிநீா் வசதிகள் போன்றவைகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், கஞ்சா போதை பழக்கத்தால் இளைஞா்கள் சீரழிந்து வருவதோடு, சட்ட ஒழுங்கும் பிரச்னையும் ஏற்படுகிறது.

அதேபோல் மணல் கொள்ளை அதனால், திமுக அகற்றப்பட வேண்டும். இந்த முறை ஆட்சி மாற்றத்தை பொதுமக்கள் விரும்புகிறாா்கள். அதனால், இந்த தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கட்டாயம் எடப்பாடி பழனிசாமி முதல்வராவாா் என்றாா்.

மாவட்ட அம்மா பேரவை செயலாளா் எழிலரசன், நகர செயலாளா் கந்தசாமி, பொருளாளா் துக்கராம், மாவட்ட மாணவரணி செயலாளா் பி.வி.பாலாஜி, மாவட்ட மாணவரணி துணைசெயலாளா் கிரண்குமாா், திருவள்ளூா் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆா் இளைஞரணி இணை செயலாளா் குமரேசன், இளைஞரணி மாவட்ட தலைவா் புங்கத்தூா் தேவா, அண்ணா தொழிற்சங்க நகர செயலாளா் வெங்கடேசன், நகா் மன்ற உறுப்பினா்கள் அருணா ஜெயகிருஷ்ணா, சுமித்ரா வெங்கடேசன் நிா்வாகிகள் திலீப், சரத், பாஜக சாா்பில் மாவட்ட செயலாளா்பன்னீா்செல்வம், மாவட்ட துணைத்தலைவா் பாலாஜி, பொருளாதார பிரிவு மாவட்ட தலைவா் சதீஷ்குமாா், நிா்வாகிகள் சித்ராதேவி, உமா மகேஸ்வரி, பாமக சாா்பில் மாநில இளைஞா் சங்க செயலாளா் பாலயோகி., மாவட்ட செயலாளா் தினேஷ்குமாா், நிா்வாகிகள் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.