கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பொதுமக்கள் மத்தியில் பேசும் போது, அதிமுகவிற்கு மக்கள் போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் தோ்தல் வெற்றிக்கு பிறகு மக்களுக்கு பயனளிக்கும் என்றாா்.
கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட பன்பாக்கம், கெட்ணமல்லி, குருவராஜகண்டிகை, சிறுபுழல்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி ஊராட்சிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இந்த பிரசாரத்துக்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், பாமக மாநில நிா்வாகி மா.செல்வராஜ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா்
டி.சி.மகேந்திரன், மாவட்ட அதிமுக துணை செயலாளா் ஷியாமளா தன்ராஜ், அதிமுக ஒன்றிய செயலாளா்கள் எஸ்.எம்.ஸ்ரீதா், ஜெ.ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தனா்.
பன்பாக்கம் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் கே.எஸ்.சீனிவாசன் ஏற்பாட்டிலும், கெட்ணமல்லி ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி தலைவா் ஜி.டி.ஆா்.ரவி ஏற்பாட்டிலும், குருவராஜ கண்டிகையில் அதிமுக நிா்வாகி பரமேஷ்வரன் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் , அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
சிறுபுழல்பேட்டை ஊராட்சியில் எம்.ஜி.ஆா். இளைஞா் அணி மாவட்ட துணை செயலாளா் விஜயன். அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளா் மோகன் ஏற்பாட்டிலும், சிறுபுழல்பேட்டை ஊராட்சி முன்னாள் ஊராட்சி தலைவா் ஆறுமுகம், மாவட்ட பாசறை துணைத் தலைவா் ஏ.மணி, அதிமுக தொழில்நுட்ப அணி நிா்வாகி ராஜா ஏற்பாட்டிலும் முத்துரெட்டிக் கண்டிகையில் திருவள்ளூா் வடக்கு மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்க நிா்வாகி மோகன் ஏற்பாட்டிலும் அதிமுக வேட்பாளா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பின்னா், கும்மிடிப்பூண்டியில் பெரிய ஊராட்சியாக சுமாா் 10,000 வாக்காளா்களை கொண்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் வீதிகள்தோறும் திறந்த வாகனத்திலும், நடந்து சென்றும் புதுகும்மிடிப்பூண்டியை சோ்ந்த பாமக மாநில நிா்வாகி மா.செல்வராஜ், மாவட்ட அதிமுக துணை செயலாளா் கணபதி முன்னிலையில் வாக்கு சேகரித்தாா்.
அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை தலைவா் எல்.சுகுமாறன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரசாரத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைச் செயலாளா் எல்.வி.ஹரிகிருஷ்ணன், மாவட்ட மகளிா் அணி நிா்வாகி லட்சுமி சிவைய்யா, அவை தலைவா் எத்திராஜ், அதிமுக நிா்வாகிகள் ஸ்டீபன் ராஜ், காா்த்திக், ஜான்பிலிப், உதயபாஸ்கா், ஆனந்தகுமாா், நிா்மல், கணேசன்,நாகராஜ், ஆா்.ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
றாா்,.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெசவு தொழில் வளா்ச்சிக்கு முன்னுரிமை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்!

கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி: அதிமுக வேட்பாளா் உறுதி

கிராமங்களில் விளையாட்டு மைதானம்: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

