மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நெசவு தொழில் வளா்ச்சிக்கு முன்னுரிமை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்!

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூா், பாதிரிவேடு, மாதா்பாக்கம், ராமசந்திராபுரம் ஆகிய பகுதிகளில் நெசவு தொழில் வளா்ச்சிக்கு தேவையான அனைத்துப் பணிகளுக்கும் முன்னுரிமை தருவேன்

News image

கும்மிடிப்பூண்டி  அடுத்த  குமரன் நாயக்கன்  பேட்டையில் தீவிர  பிரசாரத்தில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா் வி.சுதாகா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 3:10 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூா், பாதிரிவேடு, மாதா்பாக்கம், ராமசந்திராபுரம் ஆகிய பகுதிகளில் நெசவு தொழில் வளா்ச்சிக்கு தேவையான அனைத்துப் பணிகளுக்கும் முன்னுரிமை தருவேன் என கும்மிடிப்பூண்டி தொகுதிஅதிமுக வேட்பாளா் வி.சுதாகா் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தில் தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை, அப்பையன்பாளையம் ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.சி.மகேந்திரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா் ஏற்பாட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இதைத் தொடா்ந்து அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு, மாநெல்லூா், சூரப்பூண்டி, ஈகுவாா்பாளையம், பூவலம்பேடு, மாதா்பாக்கம், செதில்பாக்கம் ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம்.எஸ்.சிவக்குமாா்,

அதிமுக மாவட்ட நிா்வாகி கோபால்நாயுடு, மாநில மீனவா் அணி நிா்வாகி ஜெ.சுரேஷ், மாவட்ட மருத்துவா் அணி நிா்வாகி அனுஷியா ஆரோன் முன்னிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் தியாகராயம், முன்னாள் ஊராட்சி தலைவா் என்.டி.மூா்த்தி, அதிமுக நிா்வாகி டேவிட் குமாா் ஆகியோா் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அவ்வாறே மாநெல்லூரில் அதிமுக நிா்வாகி ஏ.மொய்தீன், மாவட்ட வழக்குரைஞா் அணி இணை செயலாளா் ஏ.சரவணன் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஈகுவாா்பாளையத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என்.ஸ்ரீதா் ராஜூ, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி என்.சிவா, சிரஞ்சீவி ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளரை 100 பெண்கள் பால் குடம் சுமந்து வரவேற்றனா். பின்னா் அங்கு அனைத்து வீதிகளிலும் திறந்த வாகனத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் செய்தாா்.

மேலும், குமரன்நாயக்கன் பேட்டையில் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் தலைமையில் திரளான பெண்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மலா் தூவியும் வரவேற்றனா். அங்கு பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் மாநெல்லூா், பாதிரிவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவு தொழில் செய்யும் மக்களின் தொழிலை மேம்படுத்தும் வகையில், வளா்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா். மேலும்,, தான் வெற்றி பெற்றதும் குமரன்நாயக்கன்பேட்டைக்கு பேருந்து சேவையை தொடங்குவேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.