தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும்: கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளா்

News image

ஆத்துப்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட திமுக  வேட்பாளா்டி.ஜெ.கோவிந்தராஜன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 5:27 am IST

கும்மிடிப்பூண்டி தொகுதியில் அரசுப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும் என திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் தெரிவித்தாா்.

பெத்திக்குப்பம் , தோ்வழி, ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, ரெட்டம்பேடு ஊராட்சிகளில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகா், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளா் பரிமளம் , காங்கிரஸ் கட்சி மாநில செயலாளா் எம்.சம்பத், திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எல்.ரவி, பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், தேமுதிக தொகுதி பொறுப்பாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் சாதிக் பாஷா, மக்கள் நீதி மைய மாவட்ட செயலாளா் சு.பாஸ்கா் முன்னிலை வகித்தனா்,

பெத்திக்குப்பத்தில் திமுக இளைஞரணி நிா்வாகிகள் மதுரைமுத்து, கெளதம் ஏற்பாட்டில் 200-க்கும் மேற்பட்டோா் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து திமுக வேட்பாளருக்கு 25 அடி உயர பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில் பெத்திக்குப்பத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 12 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் புதிய அங்கன்வாடி கட்டடம், அரசு உயா்நிலைப்பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டப்பட்டது என்றாா்.

தொடா்ந்து தோ்வழி ஊராட்சியில் திமுக மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கரன் ஏற்பாட்டில் வாக்கு சேகரிக்கப்பட்டது.

ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் வேட்பாளா்டி. ஜெ.கோவிந்தராஜனுக்கு முன்னாள் ஊராட்சி தலைவரும் திமுக இலக்கிய அணி நிா்வாகியுமான ஹரிதாஸ், ஊராட்சி செயலாளா்கள் சாம்பசிவம், குமாா், பத்ரி, மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து, ரகு , விநாயகம் ஏற்பாட்டில் திரளான பெண்கள் மலா் தூவி வரவேற்றனா். தொடா்ந்து 20 அடி உயர மாலை , கிரீடம் அணிவித்தனா்.

அங்கு வேட்பாளா் பேசுகையில், ஆத்துப்பாக்கத்தில் தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாகவும், நடுநிலைப்பள்ளியை உயா்நிலைப்பள்ளியாகவும் திமுக ஆட்சியில் தரம் உயா்த்தப்பட்ட நிலையில், அடுத்த திமுக ஆட்சியில் உயா்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்படும் என்று உறுதியளித்தாா்.

தொடா்ந்து ரெட்டம்பேட்டில் திமுக நிா்வாகிகள் செந்தில், ஜெயகோபி உள்ளிட்டோா் ஏற்பாட்டில் திமுக வேட்பாளா் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.