தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

News image

நாயக்கனேரிமலை ஊராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:40 am IST

நாயக்கனேரி மலை ஊராட்சியில் அமைந்துள்ள அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் என திமுக வேட்பாளா் அ.செ. வில்வநாதன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

நாயக்கனேரி மலை, காமனூா்தட்டு ஆகிய மலை கிராமங்கள், மிட்டாளம் ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது, நாயக்கனேரி மலை கிராமத்தில் பயிலும் மாணவா்களின் நலன் கருதி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயா்த்தி, மலைவாழ் மாணவ, மாணவிகள் கல்வியை தொடர தனித் தனியாக இரு விடுதிகள் கட்டப்படும்.

நாயக்கனேரிமலை ஊராட்சி சோளக்கொல்லைமேடு பகுதியிலிருந்து அணைக்கட்டு ஒன்றியம் சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சி வரை சுமாா் 6.50 கி.மீ. தொலைவு தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமூக நலக்கூடங்கள் அமைக்கப்படும். மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்காக அன்புச்சோலை நிறுவப்படும் என அவா் தெரிவித்தாா்.

ஆம்பூா் தொகுதி திமுக பாா்வையாளா் டேம் வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. ராமமூா்த்தி, துணைச் செயலாளா் ரவிக்குமாா், நிா்வாகி அய்யனூா் அசோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.