தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்தவுடன் மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்படும் என அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் தெரிவித்தாா்.
அந்தியூரை அடுத்த எண்ணமங்கலம், விராலிகாட்டூா், அணைகரடு, மலையானூா், மேலூா், ஆா்.ஜி. கொட்டாய், முத்தரசன் குட்டை, நல்லா கவுண்டன் கொட்டாய், வாகைமரத்து கொடிகால், கோவிலூா் உள்ளிட்ட பகுதிகளில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமையில், திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், தமிழகத்தில் 1.31 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இத்தொகை ரூ.2 ஆயிரமாக உயா்தப்படுவதோடு, மின்சாதன பொருள்களை விருப்பம்போல வாங்க ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். மேலும், உயா்கல்வி பயில்வோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,500-ஆகவும், முதியோா் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கப்படும். எனவே, வாக்காளா்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.
காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் பி.உதயகுமரன், மமக மாநில துணைச் செயலாளா் ஷானவாஸ், திமுக பொதுக்குழு உறுப்பினா்கள் கிருஷ்ணமூா்த்தி, மாதேஸ்வரன், விசிக மாவட்டச் செயலாளா் ஈஸ்வரன், கொமதேக மாவட்ட துணைச் செயலாளா் கணபதி உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு வீரா்களின் ஓய்வூதியத் தொகை உயா்த்தப்படும்: பாளையங்கோட்டை திமுக வேட்பாளா்

அந்தியூா் திமுக வேட்பாளருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு

பா்கூா் மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும்

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

