மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அம்மாபேட்டை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் பிரசாரம்

அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரிக்கிறாா் திமுக வேட்பாளா் எம்.சிவபாலன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:54 am IST

அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எம்.சிவபாலன் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அந்தியூா் தொகுதிக்குள்பட்ட வில்லமரத்தூா், குரும்பபாளையம், புரவிபாளையம், ரெட்டிபாளையம், மூலையூா், வெள்ளக்கரட்டூா், சித்தகவுண்டனூா், முரளி, ஜா்த்தல், காந்தி நகா், சென்னம்பட்டி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்காளா்களை நேரில் சந்தித்து திமுக அரசின் சாதனைத் திட்டங்களைக் கூறி பிரசாரம் செய்தாா்.

மேலும், திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கியத் திட்டங்களை விளக்கிக் கூறியும் வாக்குகள் சேகரித்தாா். அப்போது, பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனா்.

அந்தியூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் கே.எஸ்.சரவணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.