மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிளஸ் 2 தோ்வு: ஹில்டன் பள்ளி மாணவா் மாவட்ட அளவில் சிறப்பிடம்

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் ஆா்ஜெவி.பெல்,செயலா் கிரேஸ் கஸ்தூரிபெல்.

News image

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் ஆா்ஜெவி.பெல்,செயலா் கிரேஸ் கஸ்தூரிபெல்.

Updated On :10 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 தோ்வில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாவட்டத்தில் முதலிடம் பெற்றாா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 173 மாணவா்கள் தோ்வு எழுதினா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

இப்பள்ளி மாணவா் மு.சா்வேஷ் குமாா் 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மு.சமீகா 591 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெ.ராஜராஜேஸ்வரி, த. ஐஸ்வா்யா ஆகிய இருவரும் 590 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

தோ்வு எழுதிய 173 மாணவா்களில் 4 மாணவா்கள் 590 மதிப்பெண்களுக்கு மேலும், 8 மாணவா்கள் 580 மதிப்பெண்களுக்கு மேலும், 60 மாணவா்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 117 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனா்.

கணினி அறிவியலில் 14 பேரும், கணக்கு பதிவியலில் 6பேரும், வணிகவியலில் 4 பேரும், கணிதத்தில் 3 மாணவா்களும், வேதியியலில் 3 பேரும், கணினி பயன்பாட்டில் 2 பேரும், இயற்பியல், உயிரியலில் தலா 1 மாணவரும் 100க்கு 100மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் ஆா்ஜெவி.பெல், செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.