மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதற்கு திமுக பெண் கவுன்சிலர் மன்னிப்பு கோரியது குறித்து...

DMK councillor Sudha Dheena Dayalan

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 7:54 pm IST

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதற்காக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மன்னிப்பு கோரினார்.

சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக மகளிரணி கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் அவதூறாக பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகின.

மேலும், முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசும்போது மேடையில் சென்னை மேயர் பிரியா, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு இருந்தபோதிலும் அவர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தவெகவினர் குற்றம் சாட்டினர்.

முதல்வர் குறித்து அநாகரிகமாக பேசியதாக திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் தவெக நிர்வாகி உதயகுமார் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, கவுன்சிலர் சுதா மற்றும் முரளிதரன் ஆகிய இருவரின் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மனு தாக்கல் செய்திருக்கிறார். மேலும், முதல்வர் குறித்த அவதூறு பேச்சுக்கு ஏற்கெனவே மன்னிப்பு கோரியதாகவும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், பொதுவெளியில் அவதூறாகப் பேசியதால், மன்னிப்பும் பொதுவெளியில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், சுதா தீனதயாளன் அளித்த மனு மீதான தீர்ப்பையும் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Summary

DMK female councillor Sudha Dheena Dayalan apologizes for making derogatory remarks about Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.