தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய் குறித்த அவதூறு பேச்சு: சேகர்பாபு நேரில் ஆஜர்

முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் வழக்கு விசாரணைக்காக சேகர்பாபு நேரில் ஆஜரானது குறித்து...

P.K. Sekarbabu

சேகர்பாபு - கோப்புப் படம்

Published On :1 நவம்பர் 2026, 2:16 pm IST

முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் வழக்கு விசாரணைக்காக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆஜரானார்.

சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமதிக்கும் வகையில் பேசியதாக முதல்வர் விஜய்க்கு எதிராக திமுகவினர் செப். 12-ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனிடையே, சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய்யை ஒருமையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்பட 6 பிரிவுகளின்கீழ் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்காக இன்று (நவ. 1) காலை 11 மணியளவில் தன்னுடைய வழக்குரைஞர்களுடன் சேகர்பாபு நேரில் ஆஜரானார்.

Summary

DMK Former Minister Sekarbabu appears in person for questioning in the case of defaming CM Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.