மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறு: திமுக பெண் கவுன்சிலருக்கு போலீஸ் சம்மன்!

முதல்வர் விஜய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த திமுக பெண் கவுன்சிலருக்கு சம்மன்...

Chief Minister Vijay

முதல்வர் ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Published On :20 அக்டோபர் 2026, 9:33 am IST

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனை விசாரணைக்கு ஆஜராக சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னையில் கடந்த அக். 7-ல் நடைபெற்ற திமுக கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், முதல்வர் விஜய் குறித்து நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் அநாகரிகமாக பேசும்போது மேடையில் சென்னை மேயர் பிரியா, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தபோதிலும் அவரது பேச்சை குறுக்கிட்டு நிறுத்தவில்லை என்று தவெகவினர் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், முதல்வர் குறித்து அநாகரிகமாக பேசியதாக திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முரளிதரன் மீதும் பி-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திமுக பெண் கவுன்சிலர் சுதா தீனதயாளனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எஸ்பிளனேடு காவல் நிலையத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Summary

Police summons DMK female councilor for defamation of Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.