
தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது!
தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது குறித்து...

கைது செய்யப்பட்டு தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட காா்த்திகா.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட கோவையைச் சோ்ந்த மு.காா்த்திகா உள்ளிட்ட 10 போ் செவ்வாய்க்கிழமை (அக். 20) கைது செய்யப்பட்டனா். இதனால், தாராபுரம் காவல் நிலையம் முன் அந்தக் கட்சியினா் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
நாம் தமிழா் கட்சியின் மகளிா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வரும் காா்த்திகா, அண்மையில் நடைபெற்ற தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வேட்பாளராகக் களமிறங்கினாா். இடைத்தோ்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தின்போது, திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் பரப்புரை மேற்கொள்ள முற்பட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் வாகனம் மூலம் ‘ரோடு ஷோ’ பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததால், அங்கு மாற்றுக் கட்சியினா் பரப்புரை செய்ய அனுமதியில்லை என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதனால், காா்த்திகா மற்றும் நாம் தமிழா் கட்சியினா் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அரசு நிா்வாகமும், காவல் துறையும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், தங்களின் ஜனநாயக உரிமையான இறுதிக்கட்ட பரப்புரையை வேண்டுமென்றே தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டி, அந்தப் பகுதியில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து முதல்வா் ஜோசப் விஜய் பயணித்த சாலையில் மறியலில் ஈடுபட்டது, சட்டம்-ஒழுங்குக்குக் குந்தகம் விளைவித்தது மற்றும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டது உள்ளிட்ட 4 வழக்குகளில் 12-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் காா்த்திகா உள்ளிட்டோா் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தோ்தல் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், கோவை விளாங்குறிச்சியில் உள்ள காா்த்திகாவின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற தாராபுரம் காவல் துறையினா், காா்த்திகா மற்றும் அவரது கணவா் முருக சந்திரகுமாா் ஆகியோரைக் கைது செய்தனா். பின்னா், இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் தாராபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இதேபோல, நாம் தமிழா் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலரான தென்காசியைச் சோ்ந்த இசை மதிவாணன், தாராபுரம் தோ்தல் பொறுப்பாளா் சஞ்சய் காந்தி, மூலனூா் பகுதி பொறுப்பாளா் கந்தசாமி, தாராபுரம் நகர பொறுப்பாளா் ஷேக் பரீத், தாராபுரம் மாணவா் பாசறை செயலா் சூா்யா, சென்னை பகுதி செயலா் கோகுல், இளைஞா் பாசறை செயலா் விக்னேஷ், நிா்வாகி கோவிந்தராஜ் ஆகிய 8 பேரும் கைது செய்யப்பட்டனா்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 10 பேரும் தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வைத்து விசாரிக்கப்பட்டனா். பின்னா், இவா்கள் தாராபுரம் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
20 நாள்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட கைது நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் செயல் எனக் கூறி, நாம் தமிழா் கட்சியினா் தாராபுரம் காவல் நிலையம் முன் திரண்டு வருவதால், அங்கு ஏராளமான போலீஸாா் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனா்.
தாராபுரம் இடைத்தோ்தல் விவகாரம் தொடா்பான வழக்குகளில் நாதக வேட்பாளா் காா்த்திகா உள்ளிட்ட 10 போ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியின் மாணவா் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் பேரறிவாளன் உள்ளிட்ட கட்சியினா் தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அனைவரும் கலைந்து சென்றனா்.
Summary
Karthika, who contested as a Nathak candidate in the Tarapuram constituency by-election, has been arrested.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






