மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மதுராந்தகம், தாராபுரத்தில் வைப்புத்தொகையை இழந்த நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள்!

மதுராந்தகம், தாராபுரத்தில் வைப்புத்தொகையை இழந்த நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி...

பெ. சண்முகம் - மு. வீரபாண்டியன் - சீமான்.

Published On :9 அக்டோபர் 2026, 7:49 pm IST

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாதக சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சுகந்தி உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.

வாக்குப் பதிவில் தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் (தவெக) – 70,916 வாக்குகளும், பரந்தாமன் (திமுக) – 51,672 வாக்குகளும், கணிதா சம்பத் (அதிமுக) – 46,436 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி – 1,753 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 1,389 வாக்குகளும் பெற்றன.

தாராபுரம் இடைத்தேர்தலின் 23 சுற்று வாக்கு எண்ணிக்கையும் முடிந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். சத்தியபாமா (தவெக) – 66,841 வாக்குகள், சுகன்யா (திமுக) – 57,370 வாக்குகள், பானுமதி (அதிமுக) – 45,280 வாக்குகள், கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) – 5,268 வாக்குகள், லட்சுமணன் (சிபிஐ) – 1,157 வாக்குகள் பெற்றனர்.

மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட நா.த.க, வேட்பாளர் ஜானகிராமன் 2,083 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா சுமார் 5,268 வாக்குகளையும் பெற்று வைப்புத் தொகையை இழந்தனர்.

மதுராந்தகம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா. சுகந்தி வெறும் 1,506 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் வெறும் 1,157 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத்தொகையை இழந்தனர்.

Summary

The Naam Tamilar Katchi and the Communist parties have lost their security deposits in the by-elections for the Maduranthakam and Dharapuram Assembly constituencies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.