மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தட்டாஞ்சாவடியில் நோட்டாவைவிட நாம் தமிழர் குறைந்த வாக்குகள்!

தட்டாஞ்சாவடியில் நோட்டாவைவிட நாம் தமிழர் குறைந்த வாக்குகள் பெற்றது பற்றி...

சீமான்

Published On :9 அக்டோபர் 2026, 12:06 pm IST

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் நோட்டா பெற்ற வாக்குகளைவிட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெற்ற மொத்த வாக்குகள் 13,358 (61.12%) ஆகும். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் 80.81 சதவிகிதம் ஆகும்.

இரண்டாமிடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் இ. விநாயகம் 4876 வாக்குகளும் (22.31%), மூன்றாமிடம் பிடித்த திமுக வேட்பாளர் சேது என்கிற கு. சேது செல்வம் 2,664 வாக்குகளும் (12.19%), நான்காமிடம் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு. சலீம் 310 வாக்குகளும் (1.42%) பெற்றனர்.

ஐந்தாவதாக நோட்டாவுக்கு 225 பேர் வாக்களித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்தி குமாரிக்கு 171 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

இந்த தேர்தலில், இரண்டாமிடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளரை தவிர, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், நாதக வேட்பாளர்கள் உள்பட அனைவரும் டெபாசிட் தொகையை இழந்துள்ளார்.

Summary

Naam Tamilar secured fewer votes than NOTA in Thattanchavady!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.