மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ. 5,000 கோடி மோசடி! சென்னையில் தொழிலதிபரை கைது செய்த கேரள காவல்துறை!

ரூ. 5,000 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் பிரேம்குமாரை கேரள காவல்துறை கைது செய்தது குறித்து...

BLM Credit Society chairman Prem Kumar held in Chennai over alleged fund diversion

பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் கைது

Published On :29 அக்டோபர் 2026, 7:32 pm IST

சென்னையில் ரூ. 5,000 கோடி நிதி மோசடி வழக்கில் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டியின் நிறுவனத் தலைவரை கேரள காவல்துறை கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர், பிரேம்குமார். இவர் முதியோர், ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி தருவதாகக் கூறி, 2006-ல் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (பிஎல்எம்) ஹௌசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தை சென்னையில் நிறுவினார். இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாயும் திரட்டினர்.

இருப்பினும், முதிர்வுக் காலம் முடிவடைந்த பின்னரும் மக்களுக்கு உரிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதாக பிஎல்எம் நிறுவனத்தின் மீது புகார்கள் வந்தன. இதனிடையே, மக்களின் கோடிக்கணக்கான பணத்தை கூட்டுறவு சங்க விதிகளுக்குப் புறம்பாக, தன்னுடைய சொந்த வங்கிக் கணக்குகளிலும் குடும்பத்தினர் பெயர்களிலும் மற்றும் பிற தனியார் தொழில் நிறுவனங்களிலும் முறைகேடாக பயன்படுத்தியதாக பிரேம்குமார் மீது புலனாய்வு அமைப்புகள் குற்றம் சாட்டின.

இந்த நிதி மோசடி வழக்கு தொடர்பாக, சென்னையில் பிரேம்குமாரை கேரள மாநில குற்றப்பிரிவு காவல்துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இருப்பினும், அதிகாரிகள் கைது செய்யப்படும் நேரத்தில் பிரேம்குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், தற்போது நுங்கம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் பிரேம்குமாரை கேரளம் அழைத்துச் செல்ல காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் இருக்கும் பிரேம் குமார், சமீபத்தில் மரியாதை நிமித்தமாக முதல்வர் விஜய்யை சந்தித்தார்.

Summary

BLM Credit Society chairman Prem Kumar held in Chennai over alleged fund diversion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.