மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் பசும்பொன் செல்வது பற்றி...

pasumpon

பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:54 pm IST

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகின்ற 30 ஆம் தேதி பசும்பொன் கிராமத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செல்கிறார்.

விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை, வருகிற அக். 30 ஆம் தேதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் நடைபெறுகிறது.

தேவர் ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ராமநாதபுரம் பசும்பொன்னுக்கு நேரில் சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வருகின்ற அக். 30 ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மதுரை கோரிபாளையத்தில் தேவர் சிலைக்கும், தெப்பகுளத்தில் மருதுபாண்டியர் சிலைக்கும் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தவுள்ளார்.

முதல்வர் விஜய் பங்கேற்கவில்லை?

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி அன்று முதல்வர் விஜய் பசும்பொன் வருவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.

முதல்வர் விஜய் வந்திறங்கும் ஹெலிகாப்டர் இறங்குதளமும், இரும்புத் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய், பசும்பொன் பயணத்தை கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அன்றைய தினம் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

Summary

Muthuramalinga Thevar Jayanthi - M.K. Stalin to visit Pasumpon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.