மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேவர் ஜெயந்தி: இபிஎஸ், வைகோ, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மரியாதை!

முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை...

Thevar Jayanthi

தேவர் நினைவிடத்தில் இபிஎஸ் மரியாதை... - X / ADMK

Published On :30 அக்டோபர் 2026, 1:53 pm IST

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் பலரும் இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்களாக கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்றும் பேரவையில் முதலில் தேவர் படத்தைத் திறந்தவர் எம்ஜிஆர் என்றும் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், வி.கே. சசிகலா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் தேவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக முதல்வர் விஜய், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Summary

Thevar Jayanthi: EPS, Vaiko, TTV Dhinakaran pays tribute to muthuramaliga thevar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.