மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவருக்கு மரியாதை தெரிவித்தது பற்றி...

CPR

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை - x

Published On :30 அக்டோபர் 2026, 11:01 am IST

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் மரியாதை செலுத்தினார்.

விடுதலை போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 64-ஆவது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதற்காக தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்த சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் பசும்பொன் வந்தடைந்தார்.

முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.பி. ராதாகிருஷ்ணன்,

“நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் மனதில் இடம்பிடித்தது மட்டுமின்றி, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு நாட்டின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். தனது கொள்கையில் சிறிது சமரசம் செய்து கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டின் முதல்வராக முத்துராமலிங்கத் தேவர் அமர்ந்திருப்பார்.

தனது கொள்கைக்கு எதிராக எவ்வித சமரசமும் செய்துகொள்ளாதவர். தனது வாழ்நாள் முழுவதும் நேர்மை, கண்ணியத்துடன் வாழ்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர். மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க தொடர் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். மகத்தான தேசிய தலைவர் முத்துராமலிங்கத் தேவர்” எனத் தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் வருகையை ஒட்டி, மதுரை, பசும்பொன் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலை வரை ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Summary

Vice President pays tribute at the memorial of Muthuramalinga Thevar!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.