
உத்தர பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய 4 மாநில சட்ட மேலவைகளில் 28 இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றன. அதேநேரம், காங்கிரஸ் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.
மேற்கண்ட 4 மாநில மேலவைகளில் மொத்தம் 28 ஆசிரியா்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் 11 (ஆசிரியா்கள் 6, பட்டதாரிகள் 5), பிகாரில் 8 (ஆசிரியா்கள், பட்டதாரிகள் தலா 4), மகாராஷ்டிரத்தில் 5 (ஆசிரியா்கள் 2, பட்டதாரிகள் 3), கா்நாடகத்தில் 4 (ஆசிரியா்கள், பட்டதாரிகள் தலா 2) தொகுதிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட இத்தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பெரும்பாலான இடங்களுக்கு புதன்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
உ.பி.யில் பாஜக வெற்றி: உத்தர பிரதேசத்தில் 11 இடங்களில் ஆக்ரா, மீரட்-சஹாரன்பூா், லக்னெள பட்டதாரி தொகுதிகளும், பரேலி-மொராதாபாத், லக்னெள, மீரட்-சஹாரன்பூா் ஆசிரியா் தொகுதிகளும் ஏற்கெனவே பாஜக வசமிருந்தன. வாரணாசி, அலாகாபாத்-ஜான்சி பட்டதாரி தொகுதிகள், வாரணாசி ஆசிரியா்கள் தொகுதி சமாஜவாதியிடம் இருந்தது.
மீதமுள்ள ஆக்ரா, கோரக்பூா்-ஃபைசாபாத் ஆசிரியா்கள் தொகுதிகள் சுயேச்சைகள் வசமிருந்தன. புதன்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 9 இடங்களில் பாஜக 6 இடங்களையும், சமாஜவாதி 3 இடங்களையும் கைப்பற்றின. மீதமுள்ள 2 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடா்ந்து நடைபெற்றது. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக இத்தோ்தல் பாா்க்கப்பட்டது.
பிகாரில் கணக்கைத் தொடங்கிய ஜன்சுராஜ்: பிகாா் சட்ட மேலவையில் பட்டதாரிகளுக்கான 4 தொகுதிகளுக்கும், ஆசிரியா்களுக்கான 4 தொகுதிகளுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டன.
தா்பங்கா ஆசிரியா்கள் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே மேலவை உறுப்பினராக (எம்எல்சி) இருந்த மதன் மோகனை தோற்கடித்து, பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளா் சுரேஷ் பிரசாத் ராய் வெற்றி பெற்றாா். இதன்மூலம் பிகாா் சட்ட மேலவையில் ஜன்சுராஜ் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக, அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம், எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம், சுயேச்சை தலா ஓரிடத்தை கைப்பற்றினா்.
மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி முன்னிலை: மகாராஷ்டிரத்தின் 5 இடங்களில் பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவாா்) கட்சிகள் தலா ஓரிடத்தில் வெற்றிபெற்றன. எஞ்சிய 2 இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
கா்நாடகத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவு: கா்நாடக சட்ட மேலவைத் தோ்தலில் ஆளும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 3, மஜத ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. இத்தொகுதிகளில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு, அன்றிரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதியை ஆளும் காங்கிரஸிடமிருந்து மஜத கைப்பற்றியது. வடகிழக்கு ஆசிரியா்கள், தென்கிழக்கு பட்டதாரிகள், மேற்கு பட்டதாரிகள் ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. கா்நாடகத்தில் 4 மேலவைத் தொகுதிகளிலும் ஆளும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது, அரசியல்ரீதியாக பெரும் பின்னடைவாக பாா்க்கப்படுகிறது. பாஜகவும், மஜதவும் முதல்முறையாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்த மேலவைத் தோ்தலில், அக்கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.
சட்ட மேலவைத் தோ்தலில் பட்டதாரிகள் தொகுதிகளைப் பொருத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று குறைந்தபட்சம் மூன்றாண்டு ஆனவா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்களாவா். இதேபோல், ஆசிரியா்கள் தொகுதிகளைப் பொறுத்தவரை, உயா்நிலை, மேல்நிலை பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் குறைந்தபட்சம் மூன்றாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றியவா்கள் வாக்களிக்க முடியும்.
காங்கிரஸை சாடிய பிரதமா் மோடி
உத்தர பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய 4 மாநில மேலவைத் தோ்தல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸுக்கு பின்னடைவுதான் எஞ்சியுள்ளது.
தோ்தல்களின்போது வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. எதிா்கால தோ்தல்கள் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது அக்கட்சிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இந்தச் சூழலில், 4 பெரிய மாநிலங்களில் வாக்குச்சீட்டு முறையில் நடந்த எம்எல்சி தோ்தலில் காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது என்று எக்ஸ் தளத்தில் பிரதமா் மோடி கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளாா்.
Summary
Results for 28 MLC elections across 4 states! Congress gets zero!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






