தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!

வாரணாசி ஆசிரியர்கள் சட்டமேலவை தொகுதியில் சமாஜவாதி வெற்றி பெற்றது பற்றி...

Akhilesh Modi

அகிலேஷ் யாதவ், நரேந்திர மோடி - ANI

Published On :28 அக்டோபர் 2026, 1:19 pm IST

உத்தரப் பிரதேச சட்ட மேலவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மிக முக்கியத்துவம் வாய்ந்த 11 சட்ட மேலவை இடங்களுக்கான வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், பட்டதாரிகளுக்கான லக்னெள, வாரணாசி, ஆக்ரா, மீரட், அலகாபாத்-ஜான்சி ஆகிய 5 தொகுதிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான லக்னெள, வாரணாசி, ஆக்ரா, மீரட், பரேலி - மொராதாபாத், கோரக்பூர் - ஃபைசாபாத் ஆகிய 6 தொகுதிகள் அடங்கும்.

இந்த நிலையில், 11 தொகுதிகள் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 11 இடங்களில் பாஜக 5 இடங்களிலும், சமாஜவாதி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இதில், முக்கியத்துவம் வாய்ந்த பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாரணாசி ஆசிரியர்கள் தொகுதியில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி சமாஜவாதி வேட்பாளர் லால் பிஹாரி வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், வாரணாசி பட்டதாரிகள் தொகுதிக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இன்னும் மூன்று மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியிலேயே பாஜக தோல்வியைச் சந்தித்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Summary

UP MLC Election! Samajwadi Party wins in Modi’s Varanasi constituency!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.