மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை காத்திருங்கள்! தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் அதிரடி!

வாரணாசி பட்டதாரி தொகுதியில் சமாஜவாதி முன்னிலை வகிப்பது பற்றி..

Akhilesh

அகிலேஷ் யாதவ் - file photo

Published On :29 அக்டோபர் 2026, 4:13 pm IST

உத்தரப் பிரதேச சட்ட மேலவை தேர்தலில் வாரணாசி பட்டதாரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், வெற்றிச் சான்றிதழைப் பெறும் வரை வாக்கு எண்ணும் மையத்திலேயே காத்திருக்குமாறு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வாரணாசி பட்டதாரிகள் தொகுதியில், சமாஜவாதி கட்சியின் அசுதோஷ் சிங், தனது நெருங்கிய போட்டியாளரான பாஜக வேட்பாளர் கேதார்நாத் சிங்கை விட சுமார் 17,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

சட்ட மேலவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை (அக். 27) முதல் தொடங்கியது. புதன்கிழமை அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி, வாரணாசி ஆசிரியர் தொகுதியில் சமாஜவாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வாரணாசி பட்டதாரிகள் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கட்சித் தொண்டர்களை அகிலேஷ் யாதவஉற்சாகப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அகிலேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

உறுதியாக இருங்கள். வெற்றிச் சான்றிதழைக் கையில் பெறும் வரை அங்கிருந்து வெளியேறாதீர்கள்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தங்கள் சக கட்சித் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர், குடைகள், துண்டு போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்து உதவுமாறும், வீரமிக்க பாடல்களைப் பாடி அவர்களின் உற்சாகத்தைக் குறையாமல் பார்த்துக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சட்ட மேலவையின் 11 ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தொகுதிகளில், இதுவரை ஒன்பது தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாஜக ஆறு இடங்களிலும், சமாஜவாதி கட்சி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

லக்னௌ பட்டதாரிகள் தொகுதியில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக சமாஜவாதி கட்சித் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கவில்லை.

உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் 11 இடங்களுக்கான வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.