கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஒடிசாவில் 300 கிராமங்கள் தனிமைப்படுத்தல்! வான்வழி மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஒடிசாவில் மீட்பு பணியில் கடலோரக் காவல்படை..

Odisha plans air evacuations

மீட்பு நடவடிக்கை - file photo

Published On :29 அக்டோபர் 2026, 2:00 pm IST

ஒடிசாவில் ஒர்னாப் புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஞ்சம் மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மக்களை வான்வழியாக மீட்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்துடன் ஒடிசா அரசு ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநிலத் தலைநகரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனு கார்க், செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப்படை குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், வானிலை சீரற்ற நிலையில் இருப்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படலாம் என்று தெரிவித்தார்.

கஞ்சம் மாவட்டத்தில் சொராடா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மூன்று நாள்களாகப் பெய்த அதி கனமழையால் ருஷிகுல்யா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அருகிலுள்ள நகரங்களும், கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன. அஸ்கா பகுதியில், ஆற்று நீர் அபாய அளவை நெருங்கியுள்ளது. திகபஹண்டி வட்டாரத்திலும் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதீத மழையினால் கஞ்சம் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சுமார் 300 கிராமங்கள் மழையாலும் திடீர் வெள்ளத்தாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்துடன் மாநில அரசு தொடர்பில் உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை வான்வழியாக மீட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியக் கடலோரக் காவல்படை இதற்காக ஒரு ஹெலிகாப்டரை வழங்கியுள்ளதுடன், தேவையான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும். முதல் கட்டமாக 120 பேரை வான்வழியாக மீட்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வானிலை சீரற்ற நிலையிலும், தொடர்ந்து மழை பெய்வதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை குறைந்ததும் மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களை எளிதில் சென்றடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா போக்குவரத்துத் துறை அமைச்சர் பிபூதி பூஷண் ஜேனா கூறுகையில்,

தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சனகேமுண்டி, அஸ்கா வட்டாரங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ளனர். அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், பலத்த மழையினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒர்னாப் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்க, ஒடிசா அரசுக்கும் பிற மாநிலங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் ஆதரவும் ஒத்துழைப்பும், மக்களின் உயிரைக் காப்பதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கும், மாநிலம் முழுவதும் நிவாரணம், மறுவாழ்வு, சீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்கும் எங்களின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்று முதல்வர் மோகன் சரண் மாஜி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Odisha plans air evacuations in Ganjam district as Cyclone Arnab maroons 300 villages .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.