தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்!

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது குறித்து...

Cyclone 'Arnab' has formed in the Bay of Bengal

வங்கக் கடலில் உருவானது 'அர்னாப்' புயல்! - கோப்புப்படம்

Published On :26 அக்டோபர் 2026, 9:52 am IST

மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது.

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது.

இது தென்கிழக்கு திசையில் நகா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (அக். 26) காலை 5.30 மணிக்கு மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக உருவாகியுள்ளது. இதற்கு அா்னாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.

மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகரும் 'அர்னாப்' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து தீவிரப் புயலாகவும், மிக தீவிரப் புயலாகவும் வலுவடைந்து ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக்கூடும். ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக். 28)அதிகாலை கரையைக் கடக்கக்கூடும். 'அர்னாப்' கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 140 கி.மீ. வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அர்னாப் புயலால் தமிழகத்திற்கு மழை பாதிப்பு இருக்காது. டெல்டா மாவட்டங்கள் திங்கள் மாலை வரை மழை தொடர வாய்ப்புள்ளது.

Summary

Cyclone 'Arnab' has formed in the Bay of Bengal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.