தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கனமழை எதிரொலி: இன்று(அக்.26) எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது என பார்ப்போம்....

Heavy Rain Impact: Which district schools have a holiday today (Oct 26)?

விடுமுறை. - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 8:38 am IST

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் புயல் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியும், தாழ்வான பகுதிகளை நீர் சூழ்ந்தும் காணப்படுகிறது.

இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், தொடர் மழை எச்சரிக்கையை முன்னிட்டும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் விவரம்:

கோவை மாவட்டம்: தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம்: ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், உதகை (ஊட்டி), கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி & காரைக்கால்: கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பத்மஜா உத்தரவிட்டுள்ளார்.

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள்: பொரசக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விருகாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, எரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

தேனி மாவட்டம்: தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம்: நாகை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Summary

"Due to heavy rainfall and cyclone warnings across Tamil Nadu, a holiday has been declared for schools in several districts."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.