கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறித்து...

Holiday for schools only in Ranipet district today

தொடர் மழை காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(அக்.21) விடுமுறை - கோப்புப்படம்

Published On :21 அக்டோபர் 2026, 9:26 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை(அக்.21) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதால் மாவட்டம் முழுவதும் தொடா் மழை பெய்து வருகிறது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை(அக்.21) விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மாணவர்களின் நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Holiday for schools only in Ranipet district today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.