தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

கனமழையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்திருப்பது பற்றி.....

Schools are closed today (Oct. 21) in Chennai, Tiruvallur, Chengalpattu, and Kanchipuram districts.

பள்ளி மாணவர்கள். - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 6:27 am IST

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு (அக்டோபர் 25 வரை) கனமழை தொடர வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, செங்கல்பட்டு, கிண்டி, அண்ணா சாலை, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்து வருகிறது.

திடீரென தீவிரம் அடைந்த இந்த பருவமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Summary

Due to heavy rain, a holiday has been declared for schools only in 4 districts, including Chennai, today (Oct. 21).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.