தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

வானிலை! சென்னை, 10 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

சென்னை, 10 மாவட்டங்களில் இன்று பகல் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளது.

rain

மழை - பிரதிப் படம்

Published On :3 நவம்பர் 2026, 10:54 am IST

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான முரசு புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஒங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று (நவ. 3) அதிகாலை கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கத்தால், கடலோர மாவட்டங்களில் இன்று (நவ. 3) பெய்து வருகிறது. மழை காரணமாக, கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (பகல் 1 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

Summary

Weather forecast : Chance of rain in Chennai and 10 districts until 1 PM!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.