கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது பற்றி...

new low pressure

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - IMDChennai

Published On :29 அக்டோபர் 2026, 10:39 am IST

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான ஒர்னாப் புயல் ஆந்திர மாநிலம் நர்சாபூர் - காக்கிநாடா இடையே உள்ள ஏனாம் (புதுச்சேரி நிா்வாகத்துக்கு உள்பட்ட பகுதி) அருகே அதி தீவிர புயலாக புதன்கிழமை கரையைக் கடந்தது.

இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் நிலவிய வளிமண்டல சுழற்சி, இன்று காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அடுத்தடுத்து வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், தமிழ்நாட்டில் வருகின்ற நவ. 1 ஆம் தேதி முதல் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A new low-pressure area has formed in the Bay of Bengal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.