மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.26) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக். 26 ) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

 Madras High Court

சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 9:35 am IST

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை முறைகேடு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்த வழக்கு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த வழக்குகள் உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (அக்.16) விசாரணைக்கு வருகின்றன.

அதில் சில குறிப்பிடத்தக்க வழக்குகளின் பட்டியல்...

* தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, மகன் எ.வ.குமரன் தாக்கல் செய்த வழக்கு..

* அதிமுக எம்.பி. இன்பதுரை தொடர்ந்த வழக்கில் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு.

* திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை முறைகேடு செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்பிணை கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்த வழக்கு

* டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெற, ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு தடை விதிக்கக் கோரி, பாட்டில் வியாபாரிகள் நலச் சங்கம் தொடர்ந்த வழக்கு

* ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு

* சென்னை தேனாம்பேட்டை எல்லை அம்மன் காலனி பகுதியில் உள்ள சாலையில் சட்டவிரோத வாகன நிறுத்துமிடம் மற்றும் அனுமதி பெறாத ஒர்க்‌ஷாப்புகளை அகற்றக் கோரியவழக்கு

* டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு

* இந்துசம அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வருடாந்திர வரவு செலவு கணக்குகளின் தணிக்கை அறிக்கைகளை அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றக் கோரிய வழக்கு

* சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கு

Which cases are up for hearing at the Madras High Court today (Oct 26)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.