மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இனி பள்ளிகளுக்கு விடுமுறையில்லை; மழைக்குத்தான் விடுமுறை! கிடைத்த அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாட்டில் மழைக்குத்தான் விடுமுறை விடப்படும், இனி பள்ளிகளுக்கு விடுமுறையில்லை என்ற தகவல் பற்றி...

வானிலை

வானிலை - facebook

Published On :26 அக்டோபர் 2026, 11:37 am IST

வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவாகியிருக்கிறது என்று செய்தியைக் கேட்ட தமிழக பள்ளி மாணவர்கள் பலரும் இந்த வாரம் முழுக்க பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கும் என்று மகிழ்ந்திருக்கலாம்.

ஆனால், தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் வெளியிட்டிருக்கும் தகவல், அவர்களது மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறது. காரணம். இனி தமிழ்நாட்டுக்கு மழையில்லை என்ற தகவல்தான்.

பொதுவாக, மழையைப் பொழியும் மழை மேகங்களை விட, பிரதீப் ஜான் முகநூல் பக்கத்தைத்தான் பலரும் எப்போது மழை என்று சொல்வார் என பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவரே இப்படி சொல்லிவிட்டாரே என்று பலரும் மனம் நொந்து போயிருக்கலாம்.

இன்று காலை மழை நிலவரம் குறித்து பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பது என்னவென்றால், அரபிக் கடலில் உருவான தாழ்வு மண்டலம் தற்போது டெல்டா / வட இலங்கை கடற்கரைக்கு அப்பால் உள்ளது இதனால் நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்

தமிழகம் முழுவதும் பெரும்பாலும் மழையின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது; இருப்பினும், மாலை நேரத்திற்குப் பிறகு மழையின் அளவு படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட இலங்கையில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.

சென்னைக்கு பெருத்த ஏமாற்றம்! ஏன்?

இந்தத் தாழ்வு மண்டலம் முன்னதாக சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு அருகில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், அக். 25, 26ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இது தெற்கு நோக்கி நகர்ந்து டெல்டா / இலங்கை கடற்கரை பகுதியை நோக்கிச் சென்றுவிட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில், சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட மழை முற்றிலும் கிடைக்கவில்லை.

நவம்பர் 1-ஆம் தேதி வரை வறண்ட வானிலை

அக். 27ஆம் தேதி (நாளை) நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவும்; 'அர்னாப்' (Arnab) புயல் கிழக்கு திசைக் காற்றைத் தன்னுடன் ஈர்த்துச் செல்வதால், தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை முற்றிலும் நின்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

எனவே, தீபாவளிக்கு கடை வீதிகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள். நவம்பர் ஒன்றாம் தேதி வரை மழை விடுமுறை விட்டிருக்கும் இந்த நாள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.