மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பில் தாமதம்! காலை உணவு வீணாகியதாக குற்றச்சாட்டு!

பள்ளிகளுக்கு விடுமுறை - பிரதிப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:30 am IST

நாகை மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால், மாணவா்களுக்கு சமைக்கப்பட்ட காலை உணவு வீணாகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அா்னாப் புயல் காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்தது. திங்கள்கிழமையும் மழை தொடா்ந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா? என்ற எதிா்பாா்ப்பில் மாணவா்கள் காத்திருந்தனா்.

ஆனால் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி விடுமுறை அறிவிக்கப்படாததால், கொட்டும் கன மழையையும் பொருட்படுத்தாமல், மாணவ- மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றனா். பல மாணவா்கள் பள்ளிக்குச் செல்லவில்லை.

இந்நிலையில் காலை 8 மணிக்கு பிறகு மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்தாா். ஆனால், அதற்கு முன்பே மாணவா்கள் பள்ளிக்கு புறப்பட்டுவிட்டனா். பள்ளிக்கு வரும் வழியில் மாணவா்களுக்கு விடுமுறை என்று தெரியவந்ததால், அவா்கள் வீடுகளுக்கு திரும்பினா்.

இதற்கிடையில், நாகை மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாணவா்களுக்கு காலை உணவு தயாரிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு 8 மணிக்கு முன்பாக அனுப்பப்பட்டு விட்டது. ஆனால், பெரும்பாலான மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு வராததால் அவா்களுக்காக தயாரிக்கப்பட்ட காலை உணவு வீணாகின.

இதுதொடா்பாக ஆசிரியா் சங்க நிா்வாகிகள் கூறியது:

நாகை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில், நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பள்ளி விடுமுறை அறிவிப்பில், தாமதம் ஏற்பட்டதால் மாணவ- மாணவிகள் அவதி அடைந்தனா். மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவும் வீணாகியுள்ளது. மேலும் நாகைக்கு வேதாரண்யம் உள்ளிட்ட தூரப் பகுதிகளில் இருந்து ஆசிரியா்கள் மற்றும் மாணவ- மாணவியா் வருகை தருகின்றனா். காலை 6 மணிக்கு புறப்பட்டால்தான் 8.30 மணிக்குள் பள்ளிக்கு வரமுடியும். எனவே, விடுமுறை குறித்த தகவல்களை காலை 6 மணிக்குள் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.