மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும்: அமைச்சர் நிர்மல் குமார்

சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி பற்றி...

DMK President M. K. Stalin Should Quit Politics: Minister Nirmalkumar

அமைச்சர் நிர்மல் குமார்.

Published On :26 அக்டோபர் 2026, 1:20 pm IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 82 புதிய மின்தடை நீக்கும் மையங்களின் செயல்பாட்டைச் சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, புகார்களை உடனே சரிசெய்ய 60-க்கும் மேற்பட்ட வாகனங்களின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேசிய அளவில் 40,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான மாநிலங்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்குதான் வாங்குகின்றன. மத்திய அரசு கணிக்கத் தவறியதால்தான் மின்சாரத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு பற்றிப் பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. திமுக ஆட்சியில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டன. தவெக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கே.என்.நேருவின் சகோதரரைக் கொன்ற கொலையாளிகளைக் கூட திமுக ஆட்சியில் கண்டுபிடிக்க முடியவில்லை.

கொடநாடு வழக்கை திமுக ஆட்சியில் ஏன் முடிக்கவில்லை? எடப்பாடி பழனிசாமியிடம் பேரம் பேசப்பட்டதா? பள்ளிகளில் தீவிபத்தைத் தடுக்கும் விதிமுறைகளில் சமரசம் செய்து பணம் சம்பாதித்த ஆட்சி திமுக ஆட்சி. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலம் புரோக்கரை நியமித்து பள்ளிகளில் வசூல் செய்துள்ளனர். வீரமணி விஷயத்திலும் விடியோ வைத்து பேரம் பேசி வசூல் செய்தார்கள்.

முதல்வராக இருந்தபோது ஸ்டாலினுக்குத் தெரியாமல் இதெல்லாம் நடந்திருக்காது. எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு விலக வேண்டும். செஞ்சியில் காணாமல் போனது நம் வீட்டுக் குழந்தை. கடந்த 10 நாட்களாக அங்கிருக்கும் மொத்தக் காவல்துறையும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெறுகிறது.

திமுக ஆட்சியில் இருந்திருந்தால், குழந்தை காணாமல் போன சம்பவத்தையே நடக்கவில்லை என்று மூடி மறைத்திருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Summary

Minister Nirmalkumar stated that DMK President M. K. Stalin should quit politics.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.