தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்

திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து...

Nirmal kumar byte

அமைச்சர் நிர்மல் குமார் - DNS

Published On :27 அக்டோபர் 2026, 8:19 pm IST

தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு தேவையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் இன்று (அக். 27) தெரிவித்தார்.

மேலும், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கோவையில் நடைபெற்ற தனியார் சட்டக் கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்டக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் தேவையின் அடிப்படையில் புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். சில கல்லூரிகள் அனுமதி விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதால், கடந்த ஆண்டு மூன்று கல்லூரிகளின் விண்ணப்பங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்புச் சான்றிதழ்களை வழங்குவதில் திமுக ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பள்ளிகளிடம் மிரட்டி பணம் வசூலிக்கப்பட்டது. குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ்களைப் பயன்படுத்தி பெருமளவில் பணம் வசூலித்தனர்.

ஆதாரங்கள் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் வரிப்பணம் மற்றும் சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தால், அந்தத் தவறு 10 ஆண்டுகளுக்கு முன்பு, 15 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருந்தாலும் வழக்குப் பதிவு செய்யப்படும்

கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டத்தின் முன் யாரும் தப்பிக்க முடியாது என்றும், குற்றச்செயல்களை மூடி மறைக்கவோ, விசாரணையில் சமரசம் செய்யவோ அரசு தயாராக இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.

Summary

Corruption during DMK rule: Action will be taken even in old cases if evidence is found Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.