கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திமுக - அதிமுக தவறுகளால் பல இடைத்தேர்தல்கள் வரும்: நிர்மல் குமார்

திமுக - அதிமுக தவறுகளால் பல இடைத்தேர்தல்கள் வரும் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியது குறித்து...

Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 1:11 pm IST

திமுக - அதிமுக தவறுகளால் பல இடைத்தேர்தல்கள் வரும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து அவர்களுக்குள் விட்டுக்கொடுத்து இடைத்தேர்தலைச் சந்தித்தனர். முதன்முறையாக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் பணம் கொடுக்காமல், தவெகவின் 4 மாத நல்லாட்சி மற்றும் முதல்வரின் செல்வாக்கை மட்டுமே பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம்.

இவ்விரு தொகுதிகளுமே அதிமுகவின் கோட்டைகளாக இருந்தன. ஆனால், இவ்விரு தொகுதிகளிலுமே சட்டப்பேரவைத் தேர்தலைவிட அதிக மடங்கு வாக்குகளை தவெக பெற்றுள்ளது. முதல்வரின் செல்வாக்கு அனைத்து இடங்களிலும் அதிகரித்துள்ளது. அதேநேரம் திமுகவும் அதிமுகவும் கீழே அழிந்து கொண்டிருக்கின்றன. இது அவர்களின் முடிவுதான்.

முதல்வர் விஜய்க்கு எதிராக திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க எப்போது நினைத்தார்களோ, அப்போதே அவர்கள் எடுத்த முடிவுதான் இது.

இனிவரும் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜகவும் சேர்ந்து முதல்வர் விஜய்க்கு எதிராக அணி சேர்வார்கள். இருப்பினும், தமிழகத்தின் எதிர்காலம் யார் கைகளில் இருக்கிறது என்பதை மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

இந்த இடைத்தேர்தல், திமுக - அதிமுக செய்த தவறால் வந்தது. இவர்கள் மேலும் தவறுகள் செய்தால், இதுபோல பல இடைத்தேர்தல்கள் வரும்" என்று தெரிவித்தார்.

Summary

Many by-elections will come due to DMK-AIADMK mistakes, says Minister Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.