கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முன்னாள் அமைச்சர்கள் கைது பழிவாங்கல் நடவடிக்கையா? நிர்மல் குமார் விளக்கம்

திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியது பற்றி...

Nirmal Kumar

அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:07 pm IST

திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது நடவடிக்கை பழிவாங்கல் நடவடிக்கை இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுக முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்திருந்தால் யாரும் கேள்வி கேட்கக் கூடாது. தவறு செய்து மாட்டிக் கொண்டாலும் கேள்வி கேட்கக் கூடாது. கட்சி நிதி வாங்கி மாட்டிக் கொண்டாலும் கேள்வி கேட்கக் கூடாது. தங்களை மிரட்டி கட்சி நிதி வாங்கியதாக பல பள்ளிகளில் இருந்தும் புகார் அளித்தாலும் கேள்வி கேட்கக் கூடாது. பள்ளிகளில் மிரட்டி நூற்றுக்கணக்கான கோடி பணம் பறித்தாலும் கேள்வி கேட்கக் கூடாது.

அவர்கள் மீது வழக்குகள் பதியவும் கூடாது. எதுவும் செய்யாமல் இருப்பதற்கு எதற்கு இந்த அரசு? குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து, மரணமடைந்தாலும் பரவாயில்லை என சான்றிதழ் அளித்து, பள்ளிகளில் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

இதில் யாரும் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை. இதில் போலியான புகார்கள் எதுவுமில்லை. தங்களை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கல்வி நிறுவனங்கள் தெளிவாகப் புகார் அளித்துள்ளன. தற்போது கைது செய்யப்பட்டோர் எல்லோரும் தேர்தலிலேயே தோற்றவர்கள்தான். அவர்களை ஏன் பழிவாங்க வேண்டும்? மக்களே அவர்களுக்கு தீர்ப்பளித்து விட்டனர்" என்று தெரிவித்தார்.

Summary

Minister Nirmal Kumar provides clarification regarding the arrest of former DMK ministers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.