தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பற்றி....

Anbil Mahesh

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 12:25 pm IST

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், இந்த வழக்கில் திருச்சி, சென்னையில் மனுதாரருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போலீசார் ஆவணங்களைக் கைப்பற்றினர். தற்போது பத்து ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி, 7 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை மனுதாரர் சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான மனுதாரர் எங்கும் தப்பிச் செல்லவோ, சாட்சிகளை கலைக்கவோ மாட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும், போலீசார் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார். எனவே, அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துகுமார் தலைமறைவாக உள்ளார். வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. இந்த விவகாரத்தில் ரூ.400 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால், அந்த தகவல்கள் எதுவும் வெளியே வராது. மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும், முத்துகுமாரை மனுதாரர்தான் பாதுகாக்கிறார். பணப்பரிமாற்றம் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது, எனவே, முன்ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது என்ற காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Summary

The High Court has delivered a verdict dismissing the anticipatory bail petition of former Minister Anbil Mahesh in a case registered against him for allegedly committing a rs 100 crore fraud by promising to procure recognition for private schools.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.