தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரூ. 400 கோடி லஞ்சம்: முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

முத்துக்குமார்

Published On :29 அக்டோபர் 2026, 3:38 pm IST

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்க ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திமுக ஆட்சிக் காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதி மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாககூறி, ரூ. 400 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸை கடந்த அக். 26 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவருக்கு முன்பிணை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியதையடுத்து, நவ. 6 ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அன்பில் மகேஸ், ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் ஏற்கனவே திமுக பிரமுகரான அரசக்குமார் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஷீல் நாகு அடங்கிய அமர்வு நேற்று (அக். 28) விசாரித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் முத்துக்குமாரின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், முத்துக்குமாரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டினர்.

இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு வியாழக்கிழமை (அக். 29) காலை சரணடைந்தார்.

தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்த காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தினால் ஊழல் வழக்கில் ஆதாரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துக்குமார், அதன்பின்னர் திமுகவில் இணைந்தார். திமுக ஆட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவராகவும் இருந்த இவர், அமைச்சர் அன்பில் மகேஸுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Summary

Former DMK MLA Muthukumar surrendered before a special court in Chennai in connection with a case involving the receipt of a ₹400 crore bribe for granting recognition to private schools.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.