மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் கேரண்டி! விடுமுறை கோரிய மாணவர்களுக்கு பதில்!

மழைக்கு விடுமுறை கோரி மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் பதில்...

District collectors response to students who requested a holiday

மழைக்கு விடுமுறை கோரி மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் பதில் - instagram / Anand Mohan IAS

Published On :26 அக்டோபர் 2026, 3:21 pm IST

மழைக்கு விடுமுறை கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைபெய்து வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் தங்களுக்கு விடுமுறை அறிவிக்கக் கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்புகின்றனர்.

இதனை மாவட்ட ஆட்சியர்களே விடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

திருவெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், "ஆனா இங்க சில பேரு ‘லீவு விடலனா கலெக்டராவே ஃபெயில்’, ‘பர்த்டேவே டெத் டே’, ‘ரொம்ப டிப்ரஷனா இருக்கு’னு இன்ஸ்டாகிராம்ல ஆஸ்கார் லெவலுக்கு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ உங்க கஷ்டம்லாம் புரியுது, ஆனா இந்த ஓவர் ஆக்டிங் தான்டா தாங்க முடியல!

கவலைப்படாதீங்க, நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாருமே கேக்காமலேயே லீவு வரும். உங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் எப்பவும் கேரண்டி! மழை வந்தா நான் பாத்துக்கிறேன், இப்போதைக்கு புக்கப் பாத்து படிங்க!" என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் முருகனும் தனது எக்ஸ் பக்கத்தில் மாணவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை விடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

மாணவர்களின் குறுஞ்செய்திகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Summary

District collectors response to students who requested a holiday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.