எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கோவை பிளஸ் 1 மாணவர் தற்கொலை: சக மாணவர்கள் கைது!

கோவை மாணவர் தற்கொலை தொடர்பாக சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published On :23 அக்டோபர் 2026, 4:49 pm IST

கோவை பீளமேட்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த 11 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை தொடர்பாக சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, பீளமேடு ஏ.டி. காலனியைச் சோ்ந்த அசோக்குமாா், கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). இவா் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். அகிலனின் ஜாதியை அண்மையில் தெரிந்து கொண்ட சக மாணவா்கள் சிலா் அவரை ஒதுக்கிவைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் ஆசிரியா் ஒருவா் மாட்டுக்கறி சாப்பிடுவது தொடா்பாகக் கேள்வி எழுப்பி மாணவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாணவர் அகிலன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆசிரியா் விஜயகுமாா், தலைமை ஆசிரியா் அருண்குமாா் மற்றும் சக மாணவா்கள் இருவா் உள்பட நான்கு போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் ஆசிரியா் விஜயகுமாா் முதலில் கைது செய்யப்பட்டாா். தொடர்ந்து இன்று சக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று தலைமை ஆசிரியர் அருண் குமார் மற்றும் ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே தலைமை ஆசிரியா் அருண்குமாரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவரின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

Summary

coimbatore student suicide: 2 students arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.