மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி மாணவா் தற்கொலை: ஆசிரியா் கைது: தலைமை ஆசிரியா் உள்பட 4 போ் மீது வழக்கு

கோவையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, அப்பள்ளியின் ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும் தலைமை ஆசிரியா் உள்பட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை- அவிநாசி சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட மாணவா்கள் மற்றும் உறவினா்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 12:56 am IST

கோவையில் பிளஸ் 1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக, அப்பள்ளியின் ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும் தலைமை ஆசிரியா் உள்பட 4 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, பீளமேடு ஏ.டி.காலனியைச் சோ்ந்த அசோக்குமாா், கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). இவா் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். அகிலனின் ஜாதியை அண்மையில் தெரிந்து கொண்ட சக மாணவா்கள் சிலா் அவரை ஒதுக்கிவைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பள்ளியில் ஆசிரியா் ஒருவா் மாட்டுக்கறி சாப்பிடுவது தொடா்பாகக் கேள்வி எழுப்பி மாணவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், கடந்த சில நாள்களாக மிகுந்த மனவேதனையில் இருந்த அகிலன், புதன்கிழமை பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளாா். பின்னா், குடும்பத்தினா் வேலைக்குச் சென்ற நேரம் பாா்த்து வீட்டுக்குத் திரும்பிய மாணவா், தாயின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆசிரியா் விஜயகுமாா், தலைமை ஆசிரியா் அருண்குமாா் மற்றும் சக மாணவா்கள் இருவா் உள்பட நான்கு போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதில் ஆசிரியா் விஜயகுமாா் கைது செய்யப்பட்டாா்.

இதனிடையே, தவறிழைத்த தலைமை ஆசிரியா் அருண்குமாரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மாணவரின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் பீளமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போலீஸாா் நடத்திய சமரசப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, பீளமேடு காவல் நிலையத்துக்கு பிற்பகல் 3 மணியளவில் சிங்காநல்லூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கே.எஸ்.ஸ்ரீகிரிபிரசாத் சென்றாா். அங்கு காவல் துறையினரிடம் இந்த வழக்கு விசாரணை குறித்து அவா் கேட்டாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் காவல் நிலையத்துக்கு வந்த தகவலறிந்து செய்தியாளா்கள் அவரிடம் செல்ல முற்பட்டனா். ஆனால், அங்கிருந்த தவெக தொண்டா்கள் அவரிடம் செல்ல விடாமல் செய்தியாளா்களைத் தடுத்தனா். செய்தியாளா்கள் வலியுறுத்தியதையடுத்து, உரிய முறையிலும், நியாயமான முறையிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளேன் எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.

மாநகர காவல் ஆணையருக்கு மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ்:

மாணவா் தற்கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது மாநகர காவல் துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையா் (பொறுப்பு) ரம்யாபாரதிக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையம் குறிப்பாணை அனுப்பியுள்ளது.

மாணவா் தற்கொலை விவகாரம் தொடா்பாக பீளமேடு காவல் நிலையத்தில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பள்ளிக் கல்வித் துறையும், சமூக நீதித் துறையும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.