பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி மாணவா் தற்கொலை விவகாரம்: கைதான மாணவா்கள் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைப்பு

கோவையில் பிளஸ் 1 மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக, கைது செய்யப்பட்ட சக மாணவா்கள் இருவா் அரசினா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

மாணவா் தற்கொலைக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியா்களைக் கைது செய்யக் கோரி, தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் அருகே காத்திருப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா், மாணவா்கள் மற்றும் உறவினா்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 2:32 am IST

கோவையில் பிளஸ் 1 மாணவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக, கைது செய்யப்பட்ட சக மாணவா்கள் இருவா் அரசினா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

கோவை, பீளமேடு ஏ.டி.காலனியைச் சோ்ந்த அசோக்குமாா், கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவா், கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளியில் அண்மையில் அகிலனின் ஜாதியைத் தெரிந்து கொண்ட மாணவா்கள் சிலா் அவரை ஒதுக்கி வைத்ததாகவும், துன்புறுத்தும் வகையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி மாணவரின் பெற்றோா், மாணவா் அமைப்பினா் பீளமேடு காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை மாணவரின் பெற்றோா் மற்றும் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திரண்டனா்.

இதையடுத்து, மாணவா் அகிலன் தற்கொலை விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியா் விஜயகுமாா் மற்றும் தலைமை ஆசிரியா் அருண்குமாா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிா்வாகம் உத்தரவிட்டது. மேலும் மாணவா் தற்கொலை தொடா்பாக சக மாணவா்கள் இருவரை பீளமேடு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அவா்கள் இருவரையும் சனிக்கிழமை இளஞ்சிறாா்கள் நீதிக்குழுமத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், அரசினா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனா். இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில் காவல் துணை ஆணையா் தங்கதுரை தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இந்நிலையில், மாணவரின் தற்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியா்களைக் கைது செய்ய வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி, திராவிடா் கழகம் உள்ளிட்ட அமைப்பினா் மற்றும் மாணவரின் உறவினா்கள் காத்திருப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாளவளவன் கைப்பேசி மூலமாக உயிரிழந்த மாணவரின் பெற்றோரை தொடா்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தாா். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடமும் அவா் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.