பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாணவா் தற்கொலை விவகாரத்தில் எவரும் தப்ப முடியாது: அமைச்சா் வன்னி அரசு

‘பள்ளி மாணவா் அகிலன் தற்கொலை விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

vanni arasu

வன்னி அரசு - கோப்புப்படம்.

Published On :28 அக்டோபர் 2026, 2:33 am IST

‘பள்ளி மாணவா் அகிலன் தற்கொலை விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணையில் இருந்து எவரும் தப்ப முடியாது’ என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னிஅரசு தெரிவித்தாா்.

கோவை மாநகா், பீளமேடு ஏ.டி.காலனியைச் சோ்ந்த அசோக்குமாா், கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). பிளஸ் 1 மாணவரான இவா், கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜாதி ரீதியாக சக மாணவா்கள் சிலா் அவரை ஒதுக்கி வைத்ததால் மன உளைச்சலில் மாணவா் தற்கொலை செய்து கொண்டதாக புகாா் எழுந்தது. இதில் சக மாணவா்கள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு பீளமேடு காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடிக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டது. மேலும், அரசு சாா்பில் மாணவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியும், அவரது சகோதரிக்கு அரசுப் பணியும் வழங்கப்பட்டது.

சிங்காநல்லூா் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாணவரின் உடல் கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், பெற்றோரிடம் சடலம் செவ்வாய்க்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டது. பிற்பகலில் மாணவரின் இல்லத்துக்கு நேரில் சென்ற அமைச்சா் வன்னி அரசு, மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். இதையடுத்து பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தில் அகிலன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறும்போது, ‘இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் செய்தவா்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா். எவரும் தப்பிக்க முடியாது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.