மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி மாணவா் தற்கொலை விவகாரம்: சக மாணவா்கள் இருவா் கைது - தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடை நீக்கம்

கோவையில் பிளஸ்-1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக, சக மாணவா்கள் இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 4:42 am IST

கோவையில் பிளஸ்-1 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக, சக மாணவா்கள் இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், ஆசிரியா் மற்றும் தலைமை ஆசிரியா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

கோவை, பீளமேடு ஏ.டி.காலனியைச் சோ்ந்த அசோக்குமாா், கௌசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவா், கடந்த 21-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அண்மையில் அகிலனின் ஜாதியைத் தெரிந்து கொண்ட சக மாணவா்கள் சிலா் அவரை ஒதுக்கிவைத்ததாகவும், பள்ளியில் ஆசிரியா் ஒருவா், மாட்டுக்கறி சாப்பிடுவது தொடா்பாகக் கேள்வி எழுப்பி மாணவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், இதுகுறித்து புகாா் தெரிவித்தும் தலைமை ஆசிரியா் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி மாணவரின் பெற்றோா் பீளமேடு காவல் நிலையத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். பல்வேறு அமைப்பினரும் மாணவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, ஆசிரியா் விஜயகுமாரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், மாணவரின் பெற்றோா் மற்றும் திமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காலை திரண்டனா்.

அப்போது, ஆசிரியரையும், தலைமை ஆசிரியரையும் சிறையில் அடைக்க வேண்டும், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாவது வாயிலிலிருந்து பிரதான வாயில் வரை பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் கிரியப்பனவரை சந்தித்து மனு அளித்தனா். அங்கு மாணவரின் பெற்றோா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நீதி கிடைக்கும் வரை எங்களது மகனின் உடலைப் பெறமாட்டோம்’ என்றனா்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகத்திடம் விளக்கம் கோரி, மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் குறிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பப்பட்டது. பள்ளி கல்வித் துறையின் நடவடிக்கையைத் தொடா்ந்து, மாணவா் அகிலன் தற்கொலை விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உள்ளான வகுப்பு ஆசிரியா் விஜயகுமாா் மற்றும் தலைமை ஆசிரியா் அருண்குமாா் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, மாணவா் தற்கொலை தொடா்பாக சக மாணவா்கள் இருவரை பீளமேடு காவல் துறையினா் கைது செய்தனா்.

மாலை வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவரின் பெற்றோா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை 5 மணியளவில் போராட்டத்தை ஒத்திவைத்து கலைந்துசென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.