மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி மாணவா் தற்கொலை விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

கோவையில் பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கினா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 3:23 am IST

கோவையில் பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை விசாரணையைத் தொடங்கினா்.

கோவை, பீளமேடு லால்பகதூா் காலனியைச் சோ்ந்த அசோக்குமாா்- கெளசல்யாதேவி தம்பதியின் மகன் அகிலன் (16). இவா் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். இந்நிலையில், அவா் வீட்டில் கடந்த 21-ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளியில் நிலவிய ஜாதியப் பாகுபாடு காரணமாக அகிலன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோா் குற்றஞ்சாட்டினாா்.

இதையடுத்து, பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே மாணவரின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு முற்போக்கு அமைப்புகள் மற்றும் மாணவரின் பெற்றோா் தொடா் போராட்டம் நடத்திய நிலையில், 2 மாணவா்கள் கைது செய்யப்பட்டனா். பள்ளியின் ஆசிரியா், தலைமை ஆசிரியா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதையடுத்து, வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்ட நிலையில், அகிலனின் உடலை குடும்பத்தினா் கடந்த செவ்வாய்க்கிழமை பெற்றுக்கொண்டனா்.

இந்நிலையில், பீளமேடு போலீஸாரிடமிருந்து வழக்கு ஆவணங்களைப் பெற்ற சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்களது விசாரணையை புதன்கிழமை தொடங்கியுள்ளனா்.

விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டிஎஸ்பி சுகுமாா், உதவி விசாரணை அதிகாரியாக ஆய்வாளா் சுமித்ரா ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதனிடையே, சிபிசிஐடி எஸ்பி ஸ்ரீதேவி சம்பவ இடங்களுக்கு புதன்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், மாணவரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.