மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்குத் தடை! செங்கோட்டையன்

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

Ban on tourists in the Nilgiris, Kodaikanal, and Yercaud regions: Sengottaiyan

உதகை படகு இல்லம்.. - DNS

Published On :26 அக்டோபர் 2026, 2:11 pm IST

நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட அனைத்து இடங்களும் சீரமைக்கப்பட்டுவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மழையால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட அனைத்து இடங்களும் சீரமைக்கப்பட்டுவிட்டன. கோவை, திருப்பூரில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்புள்ளது. நெல் பயிர்கள் சேதம் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

கோவை, திருப்பூரில் நேற்று கூடுதல் மழை பெய்த நிலையில், தற்போது இயல்புநிலை திரும்பிவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நீலகிரி மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பேருந்து ஓட்டுநரின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிக்கு மட்டுமே அங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Summary

Ban on tourists in the Nilgiris, Kodaikanal, and Yercaud regions: Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.