தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

முதல்வரின் சாலைவலத்தில் அனுமதியின்றி நுழைவது சரியா? அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி பற்றி....

Is it right to enter the Chief Minister's roadshow without permission? asks Minister Sengottaiyan

அமைச்சர் செங்கோட்டையன்

Published On :23 அக்டோபர் 2026, 9:56 pm IST

முதல்வரின் சாலைவலத்தில் அனுமதியின்றி நுழைவது சரியா? என நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளவும், இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கவும் முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். மக்களின் அன்றாட வாழ்க்கையில் எந்தவிதமான தடங்கலும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு துறைக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மத்திய மற்றும் மாநில அளவிலான ஆய்வுகளுடன், தமிழகப் பேரிடர் மேலாண்மைக் குழுவும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறினார். மழைநீர் நிலவரம் மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் விளக்கினார்.

மேயர் பிரியா தொடர்பான குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், மக்கள் பணிகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். மக்களுக்கான பணிகளை மேற்கொள்வது அனைவரின் பொறுப்பாகும் என்றும், அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதல்வரின் சுற்றுப்பயணத்தின்போது நடைபெறும் சாலைவலத்தில் அனுமதியின்றி நுழைவது சரியான செயலா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்க வேண்டும் எனக் கூறிய அவர், லட்சக்கணக்கான மக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் இதுபோன்ற தடைகளை ஏற்படுத்துவது சரியா என்பது குறித்துத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா கைது செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த உடை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அவர் என்ன உடையில் இருந்தார் என்பது தனக்குத் தெரியாது என்றும், இதுபோன்ற கருத்துகளுக்குத் தனது பொறுப்பில் இருந்து பதிலளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Summary

Minister Sengottaiyan questioned, "Is it right to enter the Chief Minister's roadshow without permission?"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.