பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஈரோட்டில் முதல்வர் நிகழ்ச்சிக்கான இடமாற்றம் ஏன்? செங்கோட்டையன் பதில்

ஈரோட்டில் முதல்வர் நிகழ்ச்சிக்கான இடம் மாற்றப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து...

Sengottaiyan

அமைச்சர் செங்கோட்டையன் - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 3:09 pm IST

ஈரோட்டில் முதல்வர் நிகழ்ச்சிக்கான இடம் திடீரென மாற்றப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் திங்கள்கிழமை (நவ. 2) பேசியுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 9,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி ரூபாய் வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் நாளை (நவ. 3) ஈரோடு வருகிறார்.

இதனிடையே, பெருந்துறை வாய்க்கால் மேட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி காஞ்சிகோயில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

நாளை காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து முதல்வர் விஜய் புறப்படுகிறார். அதன்பிறகு, வாகனம் மூலம் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வருகிறார். வழிநெடுகிலும் மக்கள் இருப்பார்கள். அதற்கேற்றார்போல இங்கு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார்.

எத்தனை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், இந்த இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது. 13 மாவட்டங்களை சேர்ந்த மகளிரும்(பயனாளிகள்) வருகின்றனர் என்றார்.

மேலும், இந்த இடமாற்றத்துக்கான காரணம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றார்.

Summary

Minister Sengottaiyan spoke on Monday (Nov. 2) regarding the sudden change of venue for the Chief Minister's event in Erode.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.