மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தனுஷ் அளித்த பரிசுப் பொருளில் தாமரை சின்னமா?

தனுஷ் அளித்த பரிசுப் பொருளில் தாமரை முத்திரை இருப்பது குறித்து...

தனுஷ்

Published On :25 அக்டோபர் 2026, 5:59 pm IST

நடிகர் தனுஷ், தன்னுடைய ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றியதுடன் சமீபமாக பல்வேறு உதவிகளையும் அளித்து வருகிறார். மேலும், அவர் புதிதாக கட்சி தொடங்கப் போகிறார் அல்லது பிரதான கட்சியில் இணையப் போகிறார் என்று சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அதிமுகவுக்கு தனுஷ் வந்தால், அவரை இருகரம் கூப்பி வரவேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூறினார்.

இதனிடையே, சென்னை செம்மஞ்சேரியில் இன்று (அக். 25) தனுஷ் தலைமையில் நற்பணி இயக்க மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தனுஷ் ரசிகைகளும் நற்பணி இயக்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு சைவ, அசைவ விருந்தும் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ச்சிக்கு வந்த தனுஷ், வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே பேசியதாகவும், அங்கிருந்தோருக்கு தீபாவளி வாழ்த்துகள் சொல்லிவிட்டு கிளம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 3,000 பெண்களுக்கு வெள்ளி காமாட்சி விளக்கும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தனுஷ் நற்பணி இயக்க நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட வெள்ளி காமாட்சி விளக்கின் அடிப்பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் புகைப்படம் பரவி வருகிறது.

Summary

Lotus symbol in Actor Dhanush's gift

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.