தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகரின் புதிய கட்சி பாஜகவின் திட்டம்தான்: மாணிக்கம் தாகூர்

நடிகர் புதிய கட்சி தொடங்குவது வரையில் அனைத்தும் பாஜகவின் திட்டங்கள்தான் என மாணிக்கம் தாகூர் விமர்சித்தது குறித்து...

Manickam Tagore

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப. மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 2:40 pm IST

அண்ணாமலை தொடங்கி நடிகர் புதிய கட்சி தொடங்குவது வரையில் அனைத்தும் பாஜகவின் திட்டங்கள்தான் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் மாணிக்கம் தாகூர் பேசியதாவது, தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை கைகளில் போட்டுக் கொண்டனர். பின்னர் தினகரனை கைகளில் போட்டுக் கொண்டனர். ஆனால், இவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர்.

இதனையடுத்து, பாஜக பி (B)மற்றும் சி (C) திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிக்கின்றனர். பாஜகவைவிட்டு வெளியேறி, ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பாக அண்ணாமலை செயல்படுகிறார். ஆனால், பேசுவதெல்லாம் பாஜகவின் பேச்சுதான். இது பாஜகவின் பி திட்டம்.

தற்போது சி திட்டமாக, ஒரு நடிகரைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். நடிகர் ஒருவர், தன்னுடைய ரசிகர் மன்றத்தில் இருந்து கட்சியில் இணையவிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, புதிய நடிகரின் கட்சி ஆகிய மூன்றும்தான் பாஜகவின் திட்டங்கள். இவர்களின் ரிமோட் கன்ட்ரோல் தில்லியில்தான் இருக்கிறது.

பாஜகவும் ஆர்எஸ்எஸும் அதிமுகவின் இடத்தைப் பிடிப்பதற்காக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது என்று தெரிவித்தார்.

Summary

Actor's new party is BJP's plan, says Congress Leader Manickam Tagore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.