தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின்

சென்னையில் இன்று நடைபெற்ற, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று மு.க. ஸ்டாலின் பேசியது பற்றி...

The public who voted for them are now complaining about this government: M.K. Stalin

மு.க.ஸ்டாலின்.

Published On :25 அக்டோபர் 2026, 1:52 pm IST

வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று அவர் ஆற்றிய உரையின் விவரம்:

ஆட்சிப் பொறுப்பேற்று, முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்னால், முதல் பேட்டியில் பத்திரிகை நிருபர்கள் என்னைச் சந்தித்துக் கேட்டார்கள், “ஆட்சிக்கு வரப் போகிறீர்கள், ஏதாவது செய்தி சொல்ல முடியுமா?” என்று கேட்டபோது, நான் சொன்னேன், ‘வாக்களித்தவர்கள் மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோம் என்று வருத்தப்படும் அளவிற்கு என்னுடைய ஆட்சி இருக்கும். அந்தப் பணியை நான் நிறைவேற்றுவேன்” என்று சொன்னேன்.

ஆனால் இன்றைக்கு என்ன நிலை என்று கேட்டால், ‘வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல; வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது’. அதுதான் உண்மை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ரீல்ஸ் ஆட்சி என்பது, வாக்களிக்காத மக்கள் மட்டும் அல்ல; இன்றைக்கு வாக்களித்த மக்களும் புலம்பிக் கொண்டிருக்கும் சூழல் இருந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் நிலை என்னவென்று கேட்டால், விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்து போய்க் கொண்டிருக்கிறது; நிர்வாகம் சீர்குலைந்து போயிருக்கிறது; பாலியல் குற்றங்கள் இன்றைக்குத் தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது; தினம், பத்திரிகையை எடுத்தாலும் சரி, தொலைக்காட்சி பார்த்தாலும் சரி, சோசியல் மீடியா பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம் என்று செய்தி இல்லாத நாளே இன்றைக்கு நாட்டில் இல்லை.

இப்போதெல்லாம் குழந்தைகள் கடத்தல் செய்தி தொடர்ந்து ஐந்து, ஆறு நாட்களாக வந்து கொண்டிருக்கிறது; மின்தடை ஒரு பக்கம்; ‘சிங்கப்பெண்’ என்று ஒரு படையை உருவாக்கினார்கள், அந்த சிங்கப்பெண் படையைக் காப்பாற்றுவதற்கு இன்னொரு படையை உருவாக்க வேண்டிய நிலைதான் இன்றைக்கு நாட்டில் உருவாகி இருக்கிறது.

நான் சில நாட்களுக்கு முன்பு சொன்னேன். முதல்வராக இருக்கக்கூடியவர், “இரண்டு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி” என்று சொன்னார். “இல்லை, இல்லை; மின்வெட்டுக்கும், அரிவாள் வெட்டுக்கும் இடையேதான் போட்டி” என்று சொன்னேன். அது இன்றைக்கு மாறி, பாலியல் வன்கொடுமையா? போதைப் பொருள் நடமாட்டமா? என்று, அந்த இரண்டுக்கும் இடையே தான் இன்றைக்கு போட்டி ஏற்பட்டிருக்கிறது.

மேடைக்கு மேடை அவர் என்ன கத்துகிறார் என்றால், ‘தீய சக்தி, தீய சக்தி’ என்ற புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த தீய சக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Summary

The DMK President M.K. Stalin has stated that this government is functioning in such a way that even those who voted for it are complaining.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.